நடிகை நயன்தாரா நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்த படமான கனெக்ட் திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பேய் படம் தான் கனெக்ட். இந்த படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. அஸ்வின் சரவணன் மாயா, கேம் ஓவர் போன்ற நல்ல படங்களை கொடுத்த காரணத்தினால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. படம் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது, பலர் படம் மிகவும் நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்ததாக பணம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் தங்களது கருத்துக்களை கூறினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கனெக்ட் திரைப்படத்தின் கதை குறித்து பார்த்தோமானால் மருத்துவராக இருக்கும் வினய் கொரோனா காலகட்டத்தில் இறந்து விடுகிறார். அப்போது லாக் டவுன் போடப்படுகிறது. இதனால் வினயின் மனைவியாக இருக்கும் நயன்தாராவும் அவரது மகளும் தனியாக வீட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. அப்போது இறந்த தனது தந்தையுடன் பேச முயற்சிக்கும் மகளுக்கு விபரீதம் ஏற்பட்டு பேய் பிடித்து விடுகிறது. லாக்டவுன் சமயம் என்பதால் வெளியிலும் எங்கேயும் அழைத்துச் செல்ல முடியாமல் தனது மகளுக்கு பிடித்திருக்கும் பேயை எப்படி நயன்தாரா விரட்டுகிறார் என்பது குறித்த கதை தான் கனெக்ட் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் சிறுமி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பேய் பிடித்த பின்பு அவரது மாற்றம் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படம் குறித்து விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் இது 50 வருடங்களுக்கு முன்பே எடுத்த கதைதான் என்று கடுமையாக விமர்சித்தார்.
வழக்கமாக இருக்கும் பேய் கதையை எடுத்து வைத்துக் கொண்டுதான் இந்த படக்குழுவினர் இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் படத்திற்கென்று தனியாக மெனக்கிடல் எதுவும் இல்லை. கொரோனா காலத்தில் பாஸான சில மக்கு பசங்கள் மட்டும்தான் இந்த படத்தை நன்றாக இருப்பதாக சொல்லி துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பேய் படமே முன்ன பின்ன பாக்காத சிலரும் படம் நன்றாக இருப்பதாக கூறிக் கொண்டு தெரிகிறார்கள் என்று காட்டமான விமர்சனங்களை முன் வைத்தார். நீங்களும் அவரின் முழு வீடியோவை காண.! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!
Youtube Video Embed Code Credits: Tamil Talkies