
இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் போரட்டங்கள் நடைபெற்றன.
லக்னோ நகரில் பெரிதளவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் 15 பேர் பலியாகினர். இதனால், உத்தர பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்தது.
இந்த நிலையில், வதந்திகள் ஏதும் பரவாமல் தடுப்பதற்காக லக்னோ உள்ளிட்ட இடங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், இணைய சேவை முடக்கம் நாளை காலை 8 மணி வரை நீடிக்கும் என்று மாவட்ட மாஜிஸ்திரேடு அபிஷேக் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.