விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பலரையும் கவலை மறந்து இந்த நிகழ்ச்சி சிரிக்க வைப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது என்று சொல்லலாம். பலரும் இந்த நிகழ்ச்சி எப்பொழுது ஒளிபரப்பாகும் என்று தான் காத்துகொண்டு உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நான்கு சீசன்களை கடந்த குக் வித் கோமாளி தற்போது 5வது சீசனில் அடியெடுத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர்.
மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, ஷப்னம், கெமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். நடுவராக செப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION