பாக்கிய லெட்சுமி தொடரில் அம்ருதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகாவுக்கு தற்போது திருமணம் நடைபெற உள்ள செய்தி தீயாக பரவி வருகிறது. விஜய் டிவியில் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் பல சிற்பங்களுக்கு இடையே தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரித்திகா ஆரம்பத்தில் ராஜா ராணி சீசன் 1ல் கார்த்திக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். சீசன் 2வில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டார் ரித்திகா. இதன் மூலமாக அவர்களுக்கு நல்ல ரசிகர்கள் கிடைத்தனர். இவருக்கும் KPY பாலா உடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகியதால் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின்னர் இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி என்கிற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில், முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் எழிலுக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் ரித்திகா அடிக்கடி வீடியோக்கள் மட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆக்டிவாக வைத்திருக்கிறார். தற்போது இவருக்கு திருமணம் நடைபெற உள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் வேலை செய்து வரும் ஒருவரையே இவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக இருக்கிறது.
விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவரை இவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், சென்னையில் வரும் நவம்பர் 27ஆம் தேதி வரவேற்பு நடைபெற உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.