தமிழ் பேசும் மக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 4-ன் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த ப்ரோமோவில் கோமாளிகளாக வந்த பலரும் மாற்றப்பட்டு இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளிதான். இதற்கு பின்னர் தான் சூப்பர் சிங்கர், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்களை முடித்து தற்போது நாலாவது சீசனில் அடி எடுத்து வைக்கிறது. இதற்கான ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டு இருக்கிறது. சுட்டித்தனங்கள் நிறைந்த ஒரு உதவியாளரை கோமாளியாக வைத்துக்கொண்டு, குக்குகள் எப்படி சமையல் செய்கிறார்கள் என்கிற ஒரு புதுவிதமான முயற்சிதான் இந்த நிகழ்ச்சி. குக் வித் கோமாளி சீசன் 4ன் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமையல் நடக்கும் பொழுது நடுவர்கள் கொடுக்கும் தடைகளை தாண்டி, கோமாளியாக வரும் உதவியாளர்கள் செய்யும் அட்டூழியங்களையும் சகித்துக் கொண்டு எப்படி சிறப்பாக உணவு சமைக்கிறார்கள் என்பது குறித்த ஒரு நிகழ்ச்சி தான். சமையல் என்றாலே எப்பொழுதும் டென்ஷன் ஆன ஒரு வேலை. ஆனால் அதற்கு நடுவில் கோமாளிகள் அனைவரையும் சமாளித்து அதில் சிரிப்பையும் வரவழைத்து எப்படி சமைக்கிறார்கள் என்பது குறித்த ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் எந்த மூளை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க தவறவில்லை. காமெடி, கலாட்டா, நட்பு, காதல், சண்டை, சிரிப்பு, அழுகை என அனைத்து வகையான கன்டண்டும் கிடைக்கிற ஒரு இடமாக இருக்கும் இந்த நிகழ்ச்சி என்பதால் இது இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.
பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரத்தில் முடிவடைய இருப்பதால் குக் வித் கோமாளி எப்போது தொடங்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது சீசன் 4-ன் முதல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இதில் பல கோமாளிகள் மாற்றப்பட்டு இருக்கின்றனர். புதிதாக ஜிபி முத்து கோமாளியாக உள்ளே களமிறங்கி இருக்கிறார். வழக்கம்போல் ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும், வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நடுவர்களாக இருப்பது போலவும் ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறது. மேலும் புதிதாக சிங்கப்பூர் தீபன் போன்ற பல கோமாளிகளை உள்ளே இறக்கி இருக்கிறது. இந்த ப.ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television