நடிகை ராதாவுக்காக சூப்பர் சிங்கர் பூஜா பாடிய பாடல்.! நெகிழ்ந்து போன ராதா.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோவாக இருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 5ன் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன் ஒன்றாக வெளியாகி வருகிறது. தமிழ்நாட்டில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தமிழ் ரசிகர்களுடைய மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. நான்கு சீசன்களை முடித்து, தற்போது ஐந்தாவது சீசனில் அடி எடுத்து வைக்கிறது இந்த நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை ராதாவுக்காக சூப்பர் சிங்கர் பூஜா பாடிய பாடல்.! நெகிழ்ந்து போன ராதா.! ப்ரோமோ இதோ.! 1

நான்கு சீசனாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் தொலைக்காட்சியில் புது நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார். அதேபோல கோமாளிகளாக இருந்த ஜி.பி முத்து, மோனிஷா, சூப்பர் சிங்கர் பரத், நடிகை தீபா ஷங்கர் ஆகியோரின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனால் கோமாளிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு, நடிகைகள் சப்னம், அன்ஷிதா, ராமர், கேபி ஒய் வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். அதேபோல் போட்டியாளர்களாக ஷாலின் சோயா, அக்ஷய் கமல், திவ்யா துரைசாமி, ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, புட் ரிவ்யூவர் இர்ஃபான் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இவர்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா, பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 நடிகர் வசந்த் வசி, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, நடிகர் விடிவி கணேசஷ் பங்கெடுத்து வருகின்றனர். வெங்கடேஷ் பட்டு விலகியதால் அவருக்குப் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் புது நடுவராக வந்திருக்கிறார். வழக்கம் போல் ரக்ஷன், மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன் ஒன்றாக வெளியாகி வருகின்றன. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்