அசாமில் தனது பிரம்மாண்டமான வீட்டை சுற்றி காண்பித்த சுனிதா.! CWC சுனிதாவின் அழகிய Home tour

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சுனிதா. இவர் தற்போது அசாமில் உள்ள தனது சொந்த வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சுனிதா. இவர் சிறு வயதிலேயே நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வேலை தேடி வந்தார். இங்கு வந்த இவருக்கு விஜய் டிவியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் ஜோடி நம்பர் ஒன் டான்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று இருந்தார். ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு கிடைக்காத புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அசாமில் தனது பிரம்மாண்டமான வீட்டை சுற்றி காண்பித்த சுனிதா.! CWC சுனிதாவின் அழகிய Home tour 1

நடனம் மட்டுமே ஆடுவார் என்று எண்ணியிருந்த நிலையில் தன்னால் காமெடியும் செய்ய இயலும் என்பதை நிரூபித்து காட்டினார் சுனிதா. இவர் பேசும் தமிழுக்கு பல ரசிகர்கள் உண்டு. தப்பு தப்பாக தமிழை பேசுவதால் இவர் பேசுவது காமெடியாக இருக்கும். அதே நேரம் தமிழ் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இவர் முறையாக தமிழும் கற்றுக் கொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் இரண்டில் கலந்து கொண்டார். இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. தொடர்ந்து சீசன் மூன்றிலும் இவர் கலந்து கொண்டார். தற்போது சுனிதா சென்னையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பூஜைக்காக அஸ்ஸாமுக்கு சென்று இருக்கிறார் சுனிதா. அங்கு தான் பிறந்து வளர்ந்த வீட்டை அவர் சுற்றிக் காண்பித்து வீடியோ ஒன்றை எடுத்து இருக்கிறார்.

அந்த வீடியோவை தனது சொந்த youtube சேனலானன “சுனிதா எக்ஸ்பிரஸ்” என்ற சேனலில் பகிர்ந்து இருக்கிறார். தனது வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளுக்காக தனியாக அறைகள், வீட்டிலேயே கோவில் போன்ற செட்டப்புகளையும் அவர் கட்டியிருக்கிறார். அஸ்ஸாம் மலைப்பிரதேசத்தில் மலையின் மேல் அழகான ஒரு வீட்டை அவர் கட்டியிருக்கிறார். அந்த அழகிய Home Tour வீடியோவை நீங்களும் காண..! Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Sunita Xpress

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்