கேப்டனின் நிலைமைக்கு பிரேமலதா காரணமா.? கூல் சுரேஷ் பரபரப்பு பேட்டி.!

வெளியிட்டது

பிரபல காமெடி நடிகராக இருக்கும் கூல் சுரேஷ் தற்போது பிரேமலதா விஜயகாந்த் பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கிறார். கேப்டன் விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு அவரது மனைவிதான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். அது குறித்து தற்போது தனது கருத்துக்களை கூறியிருக்கிறார் கூல் சுரேஷ். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கூல் சுரேஷ். பிக் பாஸ்க்கு பின்னர் கூல் சுரேஷின் செல்வாக்கு சற்று உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் வெளியில் வந்த பின்னர் பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் இறந்தபோது கூட அவரது அஞ்சலி செலுத்தி விட்டு கண்கலங்கி பேசியிருந்தார் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேப்டனின் நிலைமைக்கு பிரேமலதா காரணமா.? கூல் சுரேஷ் பரபரப்பு பேட்டி.! 1

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிய பேட்டி அளித்திருக்கும் கூல் சுரேஷ் விஜயகாந்த் இறப்பு பற்றியும், பிரேமலதா பற்றியும் பேசியிருக்கிறார். அதில் அவர், “கேப்டனின் இழப்பு சினிமா மற்றும் அரசியல் துறைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித இனத்திற்கு ஏற்ப்பட்ட இழப்பு. அவர் ஒரு ஆண் அன்னை தெரசா. எப்படி அப்துல் கலாம் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்தாரோ அதுபோல உதவி செய்தவர்தான் விஜயகாந்த். என் மனதில் ஒன்று தோன்றுகிறது இதை சொல்லலாமா? இல்லையா? என்பது கூட எனக்கு தெரியவில்லை. பலரும் பிரேமலதா விஜயகாந்த் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றீர்கள். கேப்டனின் இந்த நிலைமைக்கு காரணம் பிரேமலதா என்று சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றீர்கள். இது முற்றிலும் ஒரு தவறான தகவல்.


இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நான் விரும்பி கேட்டுக்கொள்கிறேன். போண்டாமணி இறந்தபோது கூட ஒரு லட்ச ரூபாயை மீசை ராஜேந்திரன் சொல்லி அனுப்பியவர் கேப்டன் விஜயகாந்த். அவரை கண் போல் பார்த்துக் கொண்டவர் புண்ணியவதி பிரேமலதா. அவர் இவ்வாறு செய்துவிட்டார் என்று பரப்புவது வேதனையாக இருக்கிறது. எனவே இது போல தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: News Tamil 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்