பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் கூல் சுரேஷை அவரது நண்பர்கள் நேரில் சந்தித்து மாலை அணிவித்து வரவேற்று இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் கூல் சுரேஷ். இவர் பிக் பாஸ்க்கு முன்னர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். தீவிர சிம்பு பக்தரான இவர், ‘வெந்து தணிந்தது காடு’ படம் வருவதற்கு முன்பாக தொலைக்காட்சிகளில் ‘வெந்து தணிந்தது காடு’ என்று சொல்லி பேசுவதன் மூலமாக வைரலானார். இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 77 நாட்களாக விளையாடி வந்த அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக வெளியேறி இருந்தார். அவருக்கு ஃபேன் பேஸ் அதிகம் என்று கூறப்பட்ட போதிலும் அவரை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்திருந்தனர் பிக்பாஸ் குழுவினர். அதற்கு முக்கிய காரணம் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது விளையாட்டில் ஆர்வம் காட்டாமலும், டாஸ்க் பற்றி கூறினால் அதை புரிந்து கொள்ளாத தன்மையும் இருந்தது. தொடர்ந்து வீட்டு ஞாபகத்தில் சுவர் ஏறி குதித்து வீட்டிலிருந்து வெளியேற முயற்சி செய்தார். இது போல பல வேலைகளில் ஈடுபட்டு வந்த அவரை வெளியேற்றுவதே சிறந்தது என்று சொல்லி பிக் பாஸ் அவரை கடந்த வாரம் வெளியேற்றி இருந்தனர்.
வெளியே வந்த அவர் எந்த ஊடகங்களையும் சந்திக்காமல் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார். இந்த நிலையில் அவரை அவரது நண்பர்கள் நேரில் சந்தித்து மாலை அணிவித்தும், பொன்னாடை போற்றியும் வரவேற்று இருக்கின்றனர். பின்னர் பேட்டியளித்த அவர், “பிக்பாஸ்க்குப் பின்னர் தன்னுடைய வாழ்க்கையே மாறி இருப்பதாக கூறியிருந்தார்”. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Twitter Original Source From: SS Music