சமூக வலைத்தளங்களில் பிரபலான பெயர்தான் கூல் சுரேஷ். இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். சாக்லேட் என்ற படத்தில் மூலமாக திரைத்துறையில் அறிமுகமான இவர், காக்க காக்க, தேவதையை கண்டேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிகர்களான சிங்கம் புலி, சந்தானம் ஆகியோருடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் கூல் சுரேஷ்.மேலும் படித்தடவுடன் கிழித்து விடவும் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். இதுவே அவர் ஹீரோவாக நடித்த முதல் படமாகும். ஆனால் அப்போதெல்லாம் கவனிக்கப்படாத கூல் சுரேஷ் டி.ராஜேந்தர் பேட்டிகளின் போது வெகுவாக கவனிக்கப்பட்டார். டி. ராஜேந்தர் மற்றும் சிம்புவின் பரம ரசிகரான சுரேஷ், டி.ராஜேந்திரன் பேட்டிகளில் செய்யும் சேட்டைகளால் பிரபலமானார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

புதுப்படங்கள் வெளியாகும் பொழுது அந்த படத்தில் நடித்தவர்கள் முதல் ஆளாக வந்து பார்க்கிறார்களோ இல்லையோ இவர் முதல் ஆளாக வந்து பார்த்துவிட்டு அந்த படத்தை பற்றிய திரை விமர்சனத்தை கூறுவார். படம் நன்றாக இல்லாவிட்டாலும் இவர் பாசிட்டிவ்வான விமர்சனங்களையே கூறுவதால் ரசிகர்கள் இவரின் வீடியோக்களை விரும்பி பார்க்கத் தொடங்கினர். எப்பொழுதும் வெந்து தணிந்தது காடு அந்த படத்திற்கு வணக்கத்தை போடு என்று இவர் பேசும் டயலாக் மிகப் பிரபலம். இவர் தற்போது கோப்ரா படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து அந்த படத்தை பற்றி தனது விமர்சனங்களை கூறினார்.
அப்போது படம் நன்றாக இருந்ததாகவும், விக்ரம் நடிப்பு வேற லெவெலில் இருந்ததாகவும் கூறினார். மேலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆங்கிலம் ஹிந்தி தெரிந்த நடிகர்களை இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். எவ்வளவு தமிழ் நடிகர்கள் இருக்கிறோம் எங்களையும் பயன் படுத்துங்கள் என்று ஆவேசமாக பேசினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: TN360