நல்ல குடும்பத்துல பிறந்த எவனும் பிக்பாஸ் பாக்க மாட்டான்.! கூல் சுரேஷின் சர்ச்சை பேச்சு

வெளியிட்டது

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பிக் பாஸ் பார்க்க மாட்டார்கள் என்கிற ரீதியில் கூல் சுரேஷ் பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. வெந்து தணிந்தது காடு அந்த படத்துக்கு வணக்கத்தை போடு என்று, எந்த படம் ரிலீஸ் ஆனாலும் முதல் ஆளாக சென்று பார்த்துவிட்டு அந்த படத்தை பற்றி கருத்து கூறி அதன் மூலமாக பிரபலமானவர் கூல் சுரேஷ். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் துணை வேடங்களில் நடிகராக நடித்து வந்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் டி ராஜேந்திரன் பேட்டிகளில் தலை காட்டத் தொடங்கினார். பேட்டிகளின் நடுவே திடீரென வாழ்த்தி கோஷம் போடுவது, சேட்டைகள் செய்வது என்று இவரது வீடியோக்கள் வைரலாகத் தொடங்கியது. காமெடியாக இவர் செய்யும் சேட்டைகளை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் உருவானது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நல்ல குடும்பத்துல பிறந்த எவனும் பிக்பாஸ் பாக்க மாட்டான்.! கூல் சுரேஷின் சர்ச்சை பேச்சு 1

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் கூல் சுரேஷ். அப்போது அவரிடம் ஜிபி முத்து பிக் பாஸ்க்கு உள்ளே சென்று இருக்கிறார்கள் நீங்கள் ஏன் செல்லவில்லை என்று கேட்டார்கள். அப்போது திடீரென கோபமான அவர் எனக்கு ரத்தம் கொதிக்கிறது, பிக் பாஸ் எல்லாம் ஒரு நிகழ்ச்சியா.? சின்ன சின்ன பிள்ளைகளை அழைத்து வந்து காலையில் பாட்டை போட்டுக்கொண்டு அரைகுறை உடையுடன் ஆட வைப்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியா? நானெல்லாம் படித்த குடும்பத்தில் பிறந்தவன், நல்ல குடும்பத்தில் பிறந்தவன் என்று பேசினார். அப்போது உள்ளே இருப்பவர்கள் எல்லாம் நல்ல குடும்பத்தில் இருந்து வரவில்லையா என்ற செய்தியாளர் கேள்வி எழுப்ப நான் அப்படி சொல்லவில்லை என்று மழுப்பினார்.

தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ்க்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகநாயகன் கமலஹாசனே 6 சீசன்களையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பங்கெடுத்த பலருக்கும் திரையில் நடிகராகும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் கூல் சுரேஷ் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பிக்பாஸை பார்க்க மாட்டார்கள் என்கிற ரீதியில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கூல் சுரேஷுக்கு பலரும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: A to Z 360

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்