சிறுவனை விழுங்கிய முதலை.. முதலை வயிற்றில் என் மகன் உயிரோடு இருப்பான்..பெற்றோர்கள் நடத்திய பாச போராட்டம்

வெளியிட்டது

ஆற்றில் குளிக்க சென்ற 10 வயது சிறுவனை முதலை ஒன்று விழுங்கியதாக கூறி, அந்த முதலையைப் பிடித்து வந்து தன் மகனை முதலை வெளியே உமிழ்ந்து விடும் வரை, தாங்கள் முதலையை விடப்போவதாக இல்லை என்று பெற்றோர்கள் நடத்திய பாச போராட்டம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசம் சியோபர் கிராமத்தில் வசித்து வசித்து வரும் அந்தர் சிங் என்ற 10 வயது சிறுவன் நேற்று காலை குளிப்பதற்காக சம்பல் ஆற்றுக்குச் நண்பர்களுடன் சென்றுள்ளான். ஆற்றின் கரையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நின்று கொண்டிருந்தபோது, சிறுவன் மட்டும் ஆழமான பகுதிக்கு குளிப்பதற்காக சென்றான். திடீரென அங்கு சிறுவனின் அலறல் சத்தம் கேட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுவனை விழுங்கிய முதலை.. முதலை வயிற்றில் என் மகன் உயிரோடு இருப்பான்..பெற்றோர்கள் நடத்திய பாச போராட்டம் 1

சிறுவன் ஆற்றுக்கு நடுவே அலறிக் கொண்டிருந்ததை பார்த்த கிராம மக்கள் விரைந்து அங்கு ஓடி சென்று பார்த்த போது ராட்சத முதலை ஒன்று, அந்த சிறுவனை ஆற்றுக்கு நடுவில் வாயில் கடித்துக் கொண்டிருப்பதை கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த சிறுவனை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று போராடினர். முதலை அந்த சிறுவனை விழுங்கிவிட்டதாகவும் அவர்கள் நம்பினர். இதனால் முதலையைப் பிடித்து எப்படியாவது சிறுவனை அதன் வயிற்றிலிருந்து மீட்டு விட வேண்டும் என்று கிராமத்தினர் வலை வீசி அந்த முதலையை பிடித்தனர். முதலை அந்த சிறுவனை வெளியே உமிழும் வரை அந்த முதலையை விடப்போவதாக இல்லை என்று முதலையின் கால்களை கட்டி வைத்தும், வாயில் குச்சியை வைத்தும் பார்த்தனர். மேலும் வயிற்றுக்குள் உயிரோடு சிறுவன் இருப்பதாக நினைத்து அவனது பெயரைச் சொல்லி அழைத்துப் பார்த்தனர். ஆனால் அனைத்து முயற்சியும் கைவிடப்பட்டதால் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலை கேட்டு அந்தப் பகுதிக்கு விரைந்த காவல் மற்றும் வனத்துறையினர் முதலை சிறுவனை வெளியே உமிழ்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அதனால் முதலையை விடுவிக்குமாறு கிராம மக்களை கேட்டுக் கொண்டனர். ஆனால் தனது மகனை முதலை வெளியே உமிழ்ந்து விடும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் மாலை வரை காத்திருந்தனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி வனத்துணையினர் முதலையை மீட்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். ஆனால் திடீர் திருப்பமாக மறுநாள் காலையில் ஆற்றில் சிறுவனின் உடல் கரை ஒதுங்கியது. முதலை சிறுவனை விழுங்கவில்லை. சிறுவனின் உடலை மீட்டு இறுதிச்சடங்குளை செய்தனர் அவரது உறவினர்கள். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Thanthi Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்