கனமழையால் மூழ்கிய விளைநிலங்கள் விவசாயிகள் பரிதாபம்

வெளியிட்டது

கன மழை பெய்து இடங்களில் பல நூறு ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் வாய்ப்பற்ற சுற்றுவட்டாரப் பகுதிகளான கொட்டாம்பட்டி ,கீழவளவு ,ஒத்தக்கடை, அழகர்கோயில்,திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக இரவு பகல் என தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் எட்டிமங்களம், காமாட்சிபுரம் உள்ளிட்ட பகுதியில் நடவு செய்யப்பட்டிருக்கும் கரும்புகள் சாய்ந்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

கனமழையால் மூழ்கிய விளைநிலங்கள் விவசாயிகள் பரிதாபம் 1

புங்கம்பட்டி பகுதியில் 110 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில் இக்கதிர்கள் சாய்ந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வழக்கு வெள்ளூர் கிராமத்தில் வேர்கடலை நீர்மூழ்கி அடித்துச் செல்லப்பட்டது. 200 ஏக்கர் வேர்க்கடலை பயன்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மீசை நல்லூர் கிராமத்தில் ஏரி மதகு உடைந்து தண்ணீர் வெளியேறி 100க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் நீரில் மூழ்கின.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்