பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிய சென்னை அணி, மும்பையிடம் 97 ரன்களில் சுருண்டு படுதோல்வி.

வெளியிட்டது

இந்த ஆண்டு ஐபில் போட்டி சென்னை மும்பை ரசிகர்களுக்கு ஒரு சோகமான ஆண்டாகி போனது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி மும்பை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியமால் 97 ரன்கள் ஆல் அவுட் ஆனது. சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் டோனி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் எளிய இலக்கிய நோக்கி களம் இறங்கிய மும்பை அணி முதலில் விக்கெட்டுக்களை பறி கொடுத்தாலும் பின்னர், சுதாரித்து திலக் வர்மா மற்றும் டிம் டேவிட்டின் நேர்த்தியான ஆட்டத்தால் 14.5 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த திலக் வர்மா 34 ரங்களுடனும், டிம் டேவிட் 16 ரங்களிலும் காலத்தில் இருந்தனர். இது வெற்றியின் மூலம் மும்பை அணி இந்த ஆண்டில் பெரும் 3ஆவது வெற்றி இது.
பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிய சென்னை அணி, மும்பையிடம் 97 ரன்களில் சுருண்டு படுதோல்வி. 1

பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள இரு அணிகளுக்கும் இன்னும் இரு ஆட்டங்கள் மீதம் உள்ளன. இந்த ஆண்டில் 5 முறை கோப்பையை வென்ற மும்பையும், 4 முறை கோப்பையை வென்ற சென்னையும் போட்டியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளன. குஜராத் அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணிக்கு மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் போதும் அந்த அணி தகுதி பெற்று விடும்.மீதமுள்ள இரு இடங்களுக்கு ராஜஸ்தான்,பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் போட்டிபோட்டு வருகின்றன.

ஹைதராபாத் அணியை தவிர மத்த மூன்று அணிகளுக்கும் இன்னும் 2 போட்டிகள் உள்ளன, ஹைதராபாத் அணிக்கு 3 போட்டிகள் மீத உள்ளன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றாவது பெரிய ஸ்கோர் அடித்த தன்னுடைய ரசிகர்களை திருப்தி படுத்துவர் கோஹ்லி என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது .

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்