Categories: சினிமா

‘குக்கூ’ படத்துல நடிச்ச இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இப்படி எப்படி இருக்கிறார் தெரியுமா?

வெளியிட்டது

‘குக்கூ’ திரைப்படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது. ஆள் அடையாளமே தெரியாமல் அவர் மாறிப் போயிருக்கிறார். வருடங்கள் பல கடந்தாலும் சில படங்கள் நம் மனதை விட்டு நீங்காது இடம் பிடித்திருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் ‘குக்கூ’. இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், மாளவிகா நாயர், ஆடுகளம் முருகதாஸ், சோமசுந்தரம் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

'குக்கூ' படத்துல நடிச்ச இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இப்படி எப்படி இருக்கிறார் தெரியுமா? 1
கண் பார்வையற்ற இருவர் ரயிலில் சந்தித்துக் கொள்கின்றனர். அவர்களுக்குள் முதலில் நட்பு ஏற்படுகிறது. பின்னர் இருவரும் காதலிக்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்கிற கதை தான் ‘குக்கூ’ திரைப்படத்தின் மையக் கரு. மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மிக அழகாக பிரதிபலித்திருந்தது இந்த திரைப்படம். குறிப்பாக பார்வையற்றவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், ஒருவேளை உணவுக்காக அவர்கள் செய்யும் தொழில்கள் என அனைத்தையும் அழகாக எடுத்துக்காட்டி இருப்பார் இயக்குனர். மேலும் இந்த படத்தில் வரும் “ஆகாசத்தை நான் பாத்துட்டேன்..” என்கிற பாடல் பலருக்கும் இன்றளவும் ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது.


இந்தப் படத்தில் ஹீரோயின் ஆக நடித்த மாளவிகா நாயர் ‘குக்கூ’ படத்திற்கு பின்னர் வேறு எந்த தமிழ் படத்திலும் பெரிய அளவில் நடிக்கவில்லை. மலையாளத்தில் வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருந்த அவர், 2014ம் ஆண்டிற்கு பின்னர் தெலுங்கு திரைப் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார்.

 

தற்போது வரை தெலுங்கு படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். பலரும் மாளவிகா நாயர் என்ன ஆனார்? என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அவர் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த பலரும் ‘குக்கூ’ பட ஹீரோயினா இவர்? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்