குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த வாரம் இத்தனை நாட்களாக எலிமினேட் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளர்கள் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகின் இரண்டு டாப் ஹிட்ட ரியாலிட்டி ஷோக்களாக இருந்து வருகிறது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள். ஒரு நிகழ்ச்சி முடிந்தவுடன் இன்னொரு நிகழ்ச்சி ஆரம்பமாவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் நிறைவடைந்து, பிக்பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி நடந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலிருந்து எலிமினேட்டான கிஷோர் ராஜ்குமார், ராஜ் ஐயப்பன், மதுரை காளையன், வி.ஜே விஷால், ஷெரின், கஜேஷ், ஆண்ட்ரியன் என மொத்தம் ஏழு பேர் தற்போது இந்த வைல்ட் கார்டு போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண் என 5 பேர் டாப் 5-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் முதல் ஐந்து இடங்களுக்கான போட்டி நடைபெற்றது. அப்போது மைம் கோபி இரண்டாவதாக வெற்றி பெற்றார், மூன்றாவதாக சிவாங்கியும், நான்காவதாக சிருஷ்டியும் வெற்றி பெற்றிருந்தனர். விசித்ரா இரண்டு வாரங்களுக்கு முன்பே முதல் பைனலிஸ்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பின்னர் ஐந்தாவது ஆக சர்ப்ரைஸ் ஆக கிரணையும் தேர்ந்தெடுத்து நடுவர்கள் ஆச்சரியப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் தற்போது வைல்ட் கார்டு போட்டி நடைபெற்று இருக்கிறது. இதில் மொத்தம் ஏழு குக்குகள் பங்கெடுத்திருக்கின்றனர்.
ஏற்கனவே வெளியான தகவலின் படி வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன் வைல்டு கார்டு என்ட்ரி மூலமாக தேர்வாகி பைனலுக்கு உள்ளே வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடைசியாக எலிமினேட் செய்யப்பட்டவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன். அவர் வெளியேற்றம் குறித்து கருத்து பதிவிட்ட நெட்டிசன்கள் பலரும், இது நியாயமான வெளியேற்றம் இல்லை வெளிநாட்டில் இருந்தாலும் இந்திய உணவுகளை முறையாக கற்றுக்கொண்டு செய்து வரும் ஆண்ட்ரியாவின் வெளியேற்றம் நியாயம் இல்லாமல் நடந்திருப்பதாக கருத்துக்களை தெரிவித்தனர். தற்போது மீண்டும் ஆன்ட்ரியன் உள்ளே வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரியவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television