குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்று இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்த போட்டியில் குக்குகள் சொப்பு சாமான்களை வைத்து சமைக்க வேண்டும் என்று நடுவர்கள் அறிவுறுத்துகின்றனர். சமையல் என்றாலே டென்ஷன் தான். ஆனால் ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியாக கொண்டு செல்ல முடியும் என்று நிரூபித்து காட்டி இருக்கிறது இந்த நிகழ்ச்சி. உலகின் எந்த மூலையிலும் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் பார்த்து ரசிக்கும் படியாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. மூன்று சீசன்களை முடித்து தற்போது நான்காவது சீசனையும் விரைவில் முடிக்க இருக்கிறது. வைல்டு கார்டு என்ட்ரிக்குப் பின்னர் இறுதிப் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் பின்னர் இறுதிச்சுற்று நடைபெற்று வெற்றியாளர் அறிவிக்கப்பட இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் பத்து போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கிரண் மற்றும் கஜேஷ் என்ற இருவரை வைல்டு காடு என்ட்ரியாக உள்ளே இறக்கி இருந்தனர். மொத்தம் 12 போட்டியாளர்கள் பங்கெடுத்த இந்த நிகழ்ச்சியில் ஏழு பேர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்டனர். மீதம் இருந்த விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண் என மொத்தம் ஐந்து பேர் இறுதி போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் முதலிலேயே எலிமினேட் ஆகி சென்ற கிஷோர் ராஜ்குமார், வி ஜே விஷால், ராஜ் ஐயப்பன், மதுரை காளையன், ஷெரின், கஜேஷ், ஆன்ட்ரியன் என மீதமிருக்கும் ஏழு பேரும் தற்போது வைல்டு கார்டு ரவுண்டில் போட்டியாளர்களாக பங்கெடுத்து இருக்கின்றனர். தற்போது இவர்களுக்கு நடுவர்கள் வித்தியாசமான தடையை கொடுத்திருக்கின்றனர். அதாவது குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமான்களை வைத்து இவர்கள் சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர்.
சிறிய பொருட்களைக் கொண்டு சின்ன வெங்காயத்தை வைத்து பஜ்ஜி சுட வேண்டும் என்றும், சாக்லேட்டை வைத்து தோசை சுட வேண்டும் என்றும் நடுவர்கள் குக்குகளை அறிவுறுத்தி இருக்கின்றனர். இந்த வைல்ட் கார்டு போட்டியில் ஆண்ட்ரியன் வெற்றி பெற்று இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் அந்த காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television