ரித்திகாவை மனசுல நினைச்ச ரெண்டாவது மாசமே.! ரித்திகாவுடனான காதல் பிரிவு குறித்து பேசிய பாலா.!

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் வந்த பாலா ரித்திகாவுடனான தனது காதல் குறித்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் மனங்களை கொள்ளை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. காமெடி கலந்த குக்கிங் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. கோமாளிகள் என்ற பெயரில் சேட்டைகள் செய்யும் உதவியாளரை அருகில் வைத்துக் கொண்டு குக்குகள் எப்படி சமைக்கிறார்கள் என்று இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் செலிப்ரேஷன் ரவுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரித்திகாவை மனசுல நினைச்ச ரெண்டாவது மாசமே.! ரித்திகாவுடனான காதல் பிரிவு குறித்து பேசிய பாலா.! 1

மூன்று சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நான்காவது சீசனும் விரைவில் முடிவடைய இருக்கிறது. இறுதிச்சுற்றுக்கு விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண், ஆண்ட்ரியன் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் தகுதி பெற்றிருக்கின்றனர். இறுதி போட்டி விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக ஒரு செலிப்ரேஷன் ரவுண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக குக் வித் கோமாளி சீசன் 2 வில் இருந்து தற்போது தர்ஷா குப்தா, ரித்திகா, ஷகிலா, தீபா ஷங்கர், மதுரை முத்து போன்ற பல குக்குகள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கின்றனர். மேலும் இத்தனை நாட்களாக வராமல் இருந்த வெட்டுக்கிளி பாலாவும் தற்போது இந்த சீசனுக்கு வருகை புரிந்திருக்கிறார். இதனால் இந்த வாரம் காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் இன்று புது ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் வழக்கம் போல பாலா ஒவ்வொரு குக்களையும் கலாய்த்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ரித்திகா பற்றி அவர் கூறும் பொழுது நான் ரித்திகாவை நினைத்த இரண்டு மாதத்திற்குள் அவருக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள் என்று கூறுகிறார். சீசன் 2வின் போது ரித்திகாவும் பாலாவும் காதலித்து வருகிறார்கள் என்று வதந்தி கிளம்பியது. இந்த நிலையில் ரித்திகாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அதை குறிப்பிட்டு பாலா இவ்வாறு பேசியிருக்கின்ற வீடியோ வைரல் ஆகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்