இரண்டே சுற்றில் வெற்றியாளரை தேர்வு செய்ய போகும் நடுவர்கள்.! வெளியானது பைனலுக்கான ப்ரோமோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த சீசனின் மாபெரும் இறுதி சுற்று இந்த வாரம் நடக்க இருக்கும் நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் சிவாங்கி, செஃப் தாமு, புகழ், மோனிஷா, குரேஷி, ஆண்ட்ரியன், ஜிபி முத்து என அனைவரும் மனமுடைந்து கண்கலங்கி பேசியிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் சின்னத்திரை உலகிலேயே மாபெரும் வெற்றி பெற்ற ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. தற்போது மூன்று சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனை இந்த வாரத்துடன் முடிக்க இருக்கிறது.

இரண்டே சுற்றில் வெற்றியாளரை தேர்வு செய்ய போகும் நடுவர்கள்.! வெளியானது பைனலுக்கான ப்ரோமோ.! 1

ஆரம்பத்தில் பத்து போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி மேடையை அலங்கரிக்க 6 குக்குகளுடன் தயாராகி இருக்கிறது. விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, ஆண்ட்ரியன், மைம் கோபி, கிரண் என மொத்தம் ஆறு இறுதிப் போட்டியாளர்கள் சீசன் 4ன் இறுதி மேடையை அலங்கரித்து இருக்கின்றனர். நமக்கு கிடைத்த தகவலின் படி மைம் கோபி முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிகிறது. சிருஷ்டி இரண்டாவது இடத்திலும், விசித்திரா மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாக தெரிகிறது.


நான்காவது சீசனும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த சீசனின் சிறப்பு விருந்தினர்களாக மாகாபா ஆனந்த், பிரியங்கா, இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வருகை தந்து இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீசன் நிறைவடைவதை முன்னிட்டு தற்போது இந்த சீசனில் பங்கு பெற்ற குக்குகள், கோமாளிகள், நடுவர்கள் என அனைவரும் கண்கலங்கி அழுது இருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. நம்மை இவ்வளவு நாள் சிரிக்க வைத்தவர்கள் அழும் பொழுது நமக்கு கஷ்டமாக இருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்