குக் வித் கோமாளி சீசன் 4 இன் இறுதிச்சுற்று இந்த வாரம் நடைபெறும் இருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு ப்ரோமோக்களாக வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பல வித்தியாசமான உணவுகளை கொடுத்து நடுவர்கள் சமைக்க சொல்கின்றனர். நிலம், நீர் ஆகாயமென்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 6 குக்குகளையும் சமைக்க நடுவர்கள் தற்போது அறிவுறுத்தி இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. 3 சீசன்களை முடித்து தற்போது நான்காவது சீசனையும் அடுத்த வாரத்துடன் நிறைவு செய்ய இருக்கிறது. இந்த நிலையில் ஆறு போட்டியாளர்களுடன் இறுதி சுற்று இந்த வாரம் நடைபெற இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விசித்ரா முதல் பைனலிஸ்ட்டாக தேர்வான நிலையில் அடுத்தபடியாக மைம் கோபியும், சிவாங்கியும் அடுத்தடுத்து தேர்வாகினர். பின்னர் சிருஷ்டி மற்றும் கிரண் ஆகிய இருவரும் சேர்ந்து ஐந்து பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதியாகி இருந்தனர். பின்னர் நடந்த வைல்ட் கார்டு என்ட்ரியில் ஆண்ட்ரியன் சேர்ந்து கொள்ள தற்போது 6 குக்குகள் இறுதி மேடையை அலங்கரிக்க இருக்கின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி மைம் கோபி முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், இரண்டாவது இடத்தில் சிருஷ்டியும் மூன்றாவது இடத்தை விசித்ராவும் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இறுதிச்சுற்றுக்கான ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது. நேற்று வெளியான ப்ரோமோவில் பலரும் இந்த சீசன் நிறைவடைவந்ததை நினைத்து கண்கலங்கி அழுதிருந்தனர்.
மேலும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் இறுதி சுற்றுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். மேலும் இரண்டு சுற்றுகள் மட்டுமே வைத்து இறுதி வெற்றியாளரை தேர்வு செய்ய இருப்பதாக பட் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நிலம், நீர், ஆகாயம் என்று மூன்று உணவுகளாகப் பிரித்து அதை ஒரு குத்துகள் தேர்ந்தெடுத்து இன்னொரு குக்குக்கு வழங்க வேண்டும் என்று நடுவர்கள் செக் வைத்துள்ளனர். இந்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television