குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மைம் கோபி தனது மைம் திறமையால் ஒரு நாடகத்தை நடித்துக் காட்ட, அதை பார்த்த பின்பு பலரும் கண் கலங்கி அழுதிருக்கின்றனர். குறிப்பாக வெங்கடேஷ் பட் மனமுடைந்து அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தமிழ் மக்களின் மனங்களை கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது நிறைவடைய இருக்கிறது. அதற்கான இறுதி ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

12 குக்குகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது ஆறு பேருடன் முடிவடைய இருக்கிறது விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண், ஆண்ட்ரியன் என மொத்தம் ஆறு குக்குகள் இறுதிப் போட்டிக்கு தயாராகி இருக்கின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவின் படி நிலம், நீர், நெருப்பு, ஆகாயம் என்று நான்கு பிரிவுகளாக உணவு வகைகள் பிரிக்கப்பட்டு அது குக்குகளுக்கு டாஸ்க்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல தடைகளுடன் இந்த போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் மூன்று சுற்றுகளுக்கு மேல் போட்டி நடத்தப்பட்டு அதில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர்களை வெற்றியாளராக அறிவித்தனர். அதை மாற்றி தற்போது இரண்டு சுற்றுகளிலேயே வெற்றியாளரை தீர்மானிக்கும் படி நிகழ்ச்சியை மாற்றி அமைத்திருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான தகவலின் படி கடந்த வாரமே இறுதிக்கட்டத்திற்கான ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது. வெற்றியாளராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டாவது இடத்தை சிருஷ்டியும், மூன்றாவது இடத்தை விசித்ராவும் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் மைம் கலையில் சிறந்தவராக இருக்கும் கோபி தற்போது தாய் தந்தையருக்காக ஒரு சிறிய நாடகத்தை நடித்துக் காட்ட, அந்த பார்த்த பலரும் கண்கலங்குகின்றனர். குறிப்பாக வெங்கடேஷ் மனமுடைந்து அழுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television