விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியின் கடைசி ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்த சீசன் 4 தற்போது முடிவுக்கு வருவதை ஒட்டி இறுதி கட்ட ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறது விஜய் தொலைக்காட்சி. இந்த நிகழ்ச்சியில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு தூரம் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா என்று மாரி செல்வராஜ் தற்போது இந்த நிகழ்ச்சியை புகழ்ந்து பேசுவது போன்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தமிழ் பேசும் மக்கள் எந்த மூலையில் இருந்தாலும் பார்த்து ரசிக்கக்கூடிய நிகழ்ச்சியாக இருந்து வரும் குக் வித் கோமாளி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சீசன் முடிந்து விரைவில் பிக் பாஸ் தொடங்க இருக்கிறது. இந்த சீசன் முடிவுக்கு வருவது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்துடன் நிறைவடைய இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4-ன் ப்ரோமோக்கள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் சிறப்பு விருந்தினர்களாக பிரியங்கா தேஷ் பாண்டே, மாகாபா ஆனந்த், இயக்குனர் மாரி செல்வராஜ் போன்ற பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். இறுதி மேடையை அலங்கரிக்க விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, ஆண்ட்ரியன், கிரண், மைம் கோபி என்று ஆறு போட்டியாளர்கள் காத்திருக்கின்றனர். இதில் மைம் கோபி முதலிடம் பிடித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் சிருஷ்டி இரண்டாவது இடத்தையும், விசித்ரா மூன்றாவது இடத்தில் பிடித்திருப்பதாகவும் தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.
இறுதிச்சுற்றுகாக சிறப்பு விருந்தினராக இயக்குனர் மாரி செல்வராஜ் வந்திருக்கிறார். அவர் பேசும்பொழுது எங்கள் வீட்டில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சியை நான் விரும்பி பார்க்கிறேன். ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு தூரம் கொண்டு போய் மக்கள் மனங்களில் இடம் பிடிக்க வைக்க முடியும் என்று இந்த நிகழ்ச்சி நிரூபித்து காட்டி இருக்கிறது என்று பாராட்டி பேசி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television