பிக்பாஸ் ஜனனி கழுத்தில் மாலை போட்ட பரத்.! CWC-ல் நடந்த கலாட்டா.! அதிரடியான ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜனனியின் கழுத்தில் பரத் தற்போது மாலை அணிவித்திருக்கும் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக முதன்மை இடம் பிடித்திருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. 3 சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது நான்காவது சீசனும் விரைவில் நிறைவடைந்து பிக் பாஸ் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் பத்து குக்குகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது ஐந்து பேராக சுருங்கி இருக்கிறது. டாப் 5விற்கு விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண் ஆகிய ஐந்து பேர் டாப் 5 போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் ஜனனி கழுத்தில் மாலை போட்ட பரத்.! CWC-ல் நடந்த கலாட்டா.! அதிரடியான ப்ரோமோ இதோ.! 1

நடுவில் நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷும், குக. வித்து கோமாளி நிகழ்ச்சியின் செட்டை அமைத்த கிரணும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தனர். அவர்கள் இருவரில் கஜேஷ் எலிமெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கிரண் கடைசி போட்டி வரை சென்றிருக்கிறார். மேலும் ஆரம்பத்தில் இருந்து எலிமினேட்டான கிஷோர் ராஜ்குமார், வி ஜே விஷால், ராஜ் ஐயப்பன், மதுரை காளையன், ஷெரின், கஜேஷ் ஆகிய அனைவரும் விரைவில் வைல்ட் கார.டு என்ட்ரி போட்டியில் கலந்து கொண்டு இவர்களில் இருந்து ஒரு சிலரை ஃபைனலுக்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் பிரபலங்கள் பலர் வருகை புரிந்திருக்கின்றனர். அதில் பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜூலி, ஐஸ்வர்யா தத்தா, ஜனனி ஆகிய ஐந்து பேர் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருக்கின்றனர்.

தற்போது டாப் பைவில் இருக்கும் ஐந்து போட்டியாளர்களுடன் இந்த ஐந்து பேரும் நேரடியாக மோத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலங்களுக்கும் இந்த வாரம் ஒவ்வொரு கோமாளி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பரத் தனக்கு ஜனனி தான் வரவேண்டும் என்று கேட்கிறார். அதேபோல ஜனனியும் அவருக்கு குக்காக வருகிறார். இதனால் ஓடி சென்று பரத் ஜனனியின் கழுத்தில் மாலை போடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்