வெற்றி பெற்ற 6-வது போட்டியாளரை அறிவித்த வெங்கடேஷ் பட்.! துள்ளி குதித்த கோமாளிகள்.!

வெளியிட்டது

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வாரம் வைல்டு காரடு என்ட்ரி நடக்கும் நிலையில் வெளியேறிய ஏழு போட்டியாளர்கள் மீண்டும் வந்து சமைக்க இருக்கின்றனர். அந்த ப்ரோமோ ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில், தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் வெங்கடேஷ் பட் 6வது வெற்றியாளர் யார் என்பதை அறிவிக்க கோமாளிகள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி கலந்த ஒரு குக்கிங் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இரண்டு வருகின்றனர். சீசன் 4 ஆரம்பித்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது இந்த சீசனும் நிறைவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அரையிறுதி சுற்றுகள் முடிந்து முதல் ஐந்து இடத்திற்கு ஆட்கள் தேர்வான நிலையில் தற்போது வைல்ட் கார்டு நடந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற 6-வது போட்டியாளரை அறிவித்த வெங்கடேஷ் பட்.! துள்ளி குதித்த கோமாளிகள்.! 1

இந்த நிலையில் இந்த சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஏழு பேர் தற்போது வைல்ட் கார்டு சுற்றில் பங்கெடுத்து இருக்கின்றனர். ராஜ் ஐயப்பன், கிஷோர், விஜே விஷால், ஆண்ட்ரியன், ஷெரின், கஜேஷ், மதுரை காளையன் என மொத்தம் ஏழு போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்கெடுத்திருக்கின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமானை வைத்து அட்வான்டேஜ் டாஸ்கை நடுவர் வெங்கடேஷ் பட் கொடுத்திருந்தார். அதில் சின்ன வெங்காயத்தை வைத்து பஜ்ஜியும், சாக்லேட்டை வைத்து தோசையும் சுட வேண்டும் என்று வெங்கடேஷ் பட் அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்து மெயின் குக்கிங் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் புதிய தடை ஒன்றை நடுவர்கள் கொடுத்திருக்கின்றனர். அதாவது குக்குகள் அனைவரும் கண்ணாடி ஒன்றில் முன்பாக திரும்பி உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்னால் கோமாளிகள் சமைத்துக் கொண்டு இருப்பார்கள்.

அதை கண்ணாடி வழியாக பார்த்து குக்குகள் எப்படி சமைக்க வேண்டும் என்று கோமாளிகளுக்கு அறிவுறுத்தி, சமையலை முடிக்க வேண்டும் என்று நடுவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்த ப்ரோமோவாக வெங்கடேஷ் பட் வைல்ட் கார்ட் என்ட்ரியில் பங்கெடுத்த போட்டியாளர்கள் பற்றி பேசி கொண்டு இருக்கிறார். அப்போது ஏனோ தானோ என்று சமைக்காமல் நன்றாக சமைத்துள்ளதாக பாராட்டிய அவர் 6வது பைனலிஸ்ட்டை அறிவிக்கிறார். அப்போது கோமாளிகள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர். ஆண்ட்ரியன் தான் அந்த 6வது போட்டியாளர் என்று கூறப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்