குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது் அதில் ஐஸ் கோலா செய்யுமாறு அட்வான்டேஜ் டாஸ்கை நடுவர்கள் கொடுத்துள்ளனர். முந்தைய சீசன்களில் பிரபலமாக இருந்த இந்த ஐஸ் கோலா சேலஞ்சை தற்போது இந்த சீசனின் போட்டியாளர்களும் செய்ய இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. மூன்று சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் மொத்தம் பத்து குக்குகள் இருந்தனர். கிஷோர், ராஜ் ஐயப்பா, மதுரை காளையன், விஜே விஷால், விசித்ரா, ஆண்ட்ரியன், ஸ்ருஷ்டி, ஷெரின், சிவாங்கி, மைம் கோபி என மொத்தம் பத்து குக்குகளுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதில் காளையன், ராஜ் ஐயப்பா, விஜே விஷால், கிஷோர் என மொத்தம் நான்கு ஆண் போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் 6 போட்டியாளர்கள் சமைக்க இருக்கின்றனர். எலிமினேஷன் ரவுண்டு என்பதால் ஆறு போட்டியாளர்களும் பயத்தில் உறைந்து போய் நிற்கின்றனர். மேலும் கடந்த வாரம் நடந்த போட்டியில் சீசன் 2வில் இருந்து வந்த சகிலா இம்யூனிட்டி பேண்டை கைப்பற்றியதால் இந்த வார ரவுண்டுக்கு இம்யூனிட்டி பேண்ட் யாருக்குமே கிடைக்கவில்லை. எனவே 6 குக்குகளும் எலிமினேஷன்க்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கிறது. அதில் முந்தைய சீசங்களில் ஃபேமஸாக இருந்த ஐஸ் கோலா சேலஞ்ச் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாரம் முதன் முறையாக ஆண்ட்டிக்கு புகழ் கோமாளியாக வந்திருக்கிறார். சிருஷ்டிக்கு சுனிதா கோமாளியாக இருக்கிறார். ஐஸ் கோலா செய்து சிருஷ்டியிடம் நாங்கள் செய்து விட்டோம் என்று காட்டுகிறார் புகழ்.
அதை வாங்கிய சிருஷ்டி அதை உடைத்து விடுகிறார். இதனால் கடுப்பான ஆண்டி உங்களை யார் அதை அவரிடம் காட்டச் சொன்னது என்று புகழிடம் சண்டை போடுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television