குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது இரண்டு பேர் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்திருக்கின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவியே வெளியிட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். மூன்று சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி, தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. 10 குக்குகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 5 குக்குகளாக சுருங்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இரண்டு புதியவர்களை உள்ளே இறக்கி இருக்கிறது குக் வித் கோமாளி டீம். மதுரை காளையன், ராஜ் ஐயப்பன், விஜே விஷால், இயக்குனர் கிஷோர், ஷெரின், சிவாங்கி, ஆண்ட்ரியன், விசித்ரா, சிருஷ்டி, மைம் கோபி என மொத்தம் பத்து போட்டியாளர்கள் இந்த சீசனில் களம் இறங்கி இருந்தனர். இதில் ஆரம்பம் முதலே ஆண் போட்டியாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேற்றப்பட்டனர். காளையன், ராஜ் ஐயப்பன், விஷால், கிஷோர் ஆகிய நான்கு போட்டியாளர்கள் முதலில் வெளியேறினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசி வாரம் நடந்த எலிமினேஷன் ரவுண்டில் சிவாங்கி, சிருஷ்டி, ஷெரின் ஆகிய மூவர் நின்றிருந்தனர். ஷெரினுக்கு அசைவ கடல் உணவுகள் என்றால் அலர்ஜி. அவரது தொண்டை கட்டி, அவருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு விடும். ஆனாலும் கடந்த வாரம் கடல் உணவுகள் சமைக்கும் சேலஞ்ச் என்பதால் தனது அலர்ஜியையும் பொருட்ப்படுத்தாமல் அவர் சமைத்தார். ஆனால் அவரால் சிறந்த உணவை அளிக்க முடியவில்லை. எனவே அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஐந்து போட்டியாளர்கள் இதுவரை வெளியேறி இருக்கும் நிலையில் தற்போது இரண்டு புதிய குக்குகளை உள்ளே இறக்கி இருக்கின்றது குக் வித் கோமாளி டீம். அதில் முதலாவதாக பழம் பெறும் நடிகராக இருக்கும் நாகேஷ் அவர்களின் பேரனான கஜேஷ் என்பவரை உள்ளே இறக்கி இருக்கின்றனர். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது தந்தை ஆனந்த் பாபு நாகேஷின் மகனாவர். இவரும் நடிகர் மற்றும் நடன கலைஞராவார். ஆனந்தபாபு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் என்று தொடரிலும், முத்தழகு தொடரிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக கலை இயக்குனர் கிரண் என்பவரையும் குக்காக களம் இறக்கி இருக்கின்றனர். தொடர்ந்து ஆண் போட்டியாளர்களே வெளியேறி வந்த நிலையில் இரண்டு ஆண் போட்டியாளர்களை மீண்டும் களம் இறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television