குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் காலையில் வெளியான ப்ரோமோவில் வைல்ட் கார்டு என்ட்ரியாக இருவரை புதிதாக உள்ளே அனுப்பி இருந்தனர் குக் வித் கோமாளி டீம். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நடுவர்கள் கொடுக்கும் தொல்லையாக குக்குகள் தலையில் டிவி பெட்டி போன்ற ஒரு அட்டைப்பெட்டியை மாட்டிக் கொண்டு சமைக்க வேண்டும் என்று டாஸ்க்களை கொடுத்திருக்கின்றனர். இதனால் இந்த வாரமும் காமெடி மற்றும் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் டாப் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. 3 சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசன் ராஜ் ஐயப்பா, மதுரை காளையன், விசித்ரா, ஆண்ட்ரியன், சிவாங்கி, ஷெரின், சிருஷ்டி, மைம் கோபி, விஜே விஷால், இயக்குநர் கிஷோர் என மொத்தம் பத்து போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ஐந்து குக்குகள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மதுரை காளையன், இயக்குனர் கிஷோர், ராஜ் ஐயப்பா, விஜே விஷால் என்று தொடர்ந்து ஆண் போட்டியாளர்களே வெளியேறி வந்தனர். இது சற்று சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதனால் இந்த சர்ச்சையை போக்கும் வகையில் இன்று மீண்டும் இரண்டு ஆண் போட்டியாளர்களை உள்ளே இறக்கி இருக்கின்றனர். அதில் நடிகர் நாகேஷின் பேரனும், மௌன ராகம், முத்தழகு போன்ற சீரியலில் நடித்து வரும் ஆனந்தபாபுவின் மகனான கஜேஷ் என்பவரை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே இறக்கி இருக்கின்றனர். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்துவிட்டு ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். அடுத்ததாக திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி வரும் கிரண் என்பவரையும் களம் இறக்கி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் எப்படி சமைக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்த்து குக் வித் கோமாளி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்த வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடுவர்கள் குக்குகள் சமைக்கும் பொழுது தொல்லை ஒன்றை கொடுப்பார்கள். அந்த தொல்லை தலையில் டிவி பெட்டி போல ஒரு அட்டைப்பெட்டியை மாட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என்பதுதான். அப்படி ஸ்ருஷ்டி நின்று கொண்டிருக்கும் போது புகழ் வந்து அவரை வம்பிழுக்கிறார். இதனால் கடுப்பான சிருஷ்டி அந்த அட்டைப்பெட்டியை எடுத்து புகழின் தலையில் மாட்டிவிட்டு அவரை அடித்து துவைக்கிறார். காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television