தமிழ் இசை உலகில் முண்ணனி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

தனித்துவமான இசையும், புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை பிரபலமாக்கி அழகு பார்ப்பதும் இமானுடைய சாதனைகள். இவரது இசைக்கென்று கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
மெல்லிசையில் சமீபகாலமாக கொடி கட்டி பறந்து வருகிறார் இமான். ‘கும்கி’ மற்றும் ‘மைனா’ படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் அடித்தன. இது போன்ற பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார் டி.இமான்.
இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது ‘விசில்’ தான். அதில் வரும் “அழகிய அசுரா..” பாடலுக்குப் பின்பே வெளிச்சத்திற்கு வந்தார். தமிழின் முண்ணனி நடிகர்கள் அனைவரின் படத்திலும் இசையமைத்து விட்டார்.
ரஜினி நடித்த ‘அண்ணாத்த’, விஜய் நடித்த ‘ஜில்லா’, அஜீத் நடித்த ‘விஸ்வாசம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
இதில் ‘விஸ்வாசம்’ படத்தில் வரும் “கண்ணான கண்ணே..” பாடல் உலகெங்கும் ஹிட் அடித்துள்ளது. இவருக்கு 2008ம் ஆண்டு மோனிக்கா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. 13 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவடைந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
பின்னர் கோலிவுட் நடிகர் உபால்டின் மகள் அமலியை இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார். அமலி மற்றும் இமான் இருவரும் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் இமானுக்கு 41வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இமானின் இரண்டாவது மனைவி அமலி, அவரது மகள், இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து தன் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பலரும் இம்மானுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.