தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக தளபதி விஜய். தன் ரசிகர் கூட்டத்தை தளபதியாய் வழி நடத்தி செல்லும் விஜய்க்கு மிக பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது. தன்னுடைய முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து இவர் மீது வந்த விமர்சனங்களை உடைத்தெறிந்து இன்று உச்சத்தில் நிற்கிறார் இவர். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் beast என்ற

படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. அது மட்டுமில்லாது யோகி பாபு , vtv கணேஷ் , அபர்ணா தாஸ் என பலரும் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு செய்தி
பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி செம்ம ஹிட்டான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா வை விட அதிகமாக பெரும் புகழும் பெற்றவர் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர். இந்நிலையில் தற்போது ஷபீர் தளபதி விஜய் நடிக்கும் beast படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருந்து தான் ஆகவேண்டும்.