Categories: சினிமா

தாயின் ஆசையை நிறைவேற்ற கோவில் கட்டிய விஜய் பட வில்லன் டேனியல் பாலாஜி.! கும்பாபிஷேக வீடியோ இதோ

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் டேனியல் பாலாஜி. இவர் தற்போது தனது தாயாரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னையில் கோவில் ஒன்றைக் கட்டி சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார். அந்த கோவில் கும்பாபிஷேகத்தின் போது வர்ணம் பூசும் வேலையை அவரே பார்த்திருக்கிறார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. டேனியல் பாலாஜி 2000 ஆம் ஆண்டு வெளியான சித்தி என்கிற நாடகத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நாடகத்தில் டேனியல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததால் இவர் டேனியல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.

தாயின் ஆசையை நிறைவேற்ற கோவில் கட்டிய விஜய் பட வில்லன் டேனியல் பாலாஜி.! கும்பாபிஷேக வீடியோ இதோ 1

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார் டேனியல் பாலாஜி. மேலும் இவர் நடிகர் முரளிக்கு நெருங்கிய உறவினர் ஆவார். முரளியின் தந்தை சித்தலிங்கையா இவரது சொந்த மாமா ஆவார். கமலஹாசன் நடித்து வெளிவராத மருதநாயகம் படத்தில் யூனிட் ப்ரொடக்ஷன் மேனேஜராக பாலாஜி தனது வெள்ளித்திரை வாழ்க்கையை தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் அவரது முதல் படம் ஏப்ரல் மாதத்தில். அதைத் தொடர்ந்து காதல் கொண்டேன், காக்க காக்க போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். காக்க காக்க படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக சூர்யாவுடன் நடித்தார். பின்னர் தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, பைரவா, இப்படை வெல்லும், வடசென்னை, பிகில் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ஆனந்தம் விளையாடும் வீடு என்கிற படத்திலும் இவர் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் டேனியல் பாலாஜி.

தொடர்ந்து தனுசுடன் கேப்டன் மில்லர் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் டேனியல் பாலாஜி ஒரு கோவிலுக்கு பெயிண்ட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதன் பிண்ணனி குறித்து ஆராய்ந்த போது அவர் தனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை ஆவடியில் அங்காளபரமேஸ்வரி ஆலயம் ஒன்றை கட்டி முடித்துள்ளார். இதை தனது சொந்த செலவில் அவர் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


கடந்த 2019ம் ஆண்டு இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலை அவர் தனது தாயாரின் ஆசைக்காக கட்டியுள்ளார். இந்த நிலையில் அந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு அவர் பெயிண்ட் அடிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் அர்ஜூன் ஹனுமார் பக்தர் என்பதால் கர்நாடகாவில் பிரம்மாண்ட ஹனுமார் கோவிலை கட்டியுள்ளார். ராகவா லாரன்ஸ் ராகவேந்திரா கோவிலை கட்டியுள்ளார்.

அந்த வரிசையில் தற்போது டேனியல் பாலாஜியின் தனது தாயாரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை ஆவடி பகுதியில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஒன்றை கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆலய கும்பாபிஷேக வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits:

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்