Categories: சினிமா

சொன்னதை செய்யாமல் இழுத்தடித்த படக்குழு.! கேப்டன் மில்லர் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய நடிகர்?

வெளியிட்டது

நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் இருந்து தற்போது வில்லன் நடிகர் ஒருவர் விலகி இருக்கும் செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தற்போது படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிக்க இருந்த நடிகர் ஒருவர் படத்திலிருந்து விலகி இருக்கும் செய்தி தனுஷ் ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த படம் 1940 காலக் கட்டங்களில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவிற்கு முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் சில முக்கிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சொன்னதை செய்யாமல் இழுத்தடித்த படக்குழு.! கேப்டன் மில்லர் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய நடிகர்? 1
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படம் சுதந்திரத்திற்கு முன்பு நடந்த காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாகமாகவும், சுதந்திரத்திற்கு பின் நடக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாகமாகவும், தற்போதைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாகமாகவும் மொத்தம் மூன்று பாகமாக எடுக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து படக் குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் படத்தில் தனுஷ் ஒரு போராளியாக நடித்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் டேனியல் பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்த நிலையில், தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. டேனியல் பாலாஜி கொடுத்த கால்ஷீட்டுகளின் படி அவருக்கான காட்சிகளை படப்பிடிப்பது சரியான முறையில் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.


இதனால் அவரால் புதிய கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்றும், எனவே அவர் படத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது டேனியல் பாலாஜிக்கு பதிலாக வேறு ஒருவரை வில்லனாக நடிக்க வேண்டும் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிய வருகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தற்போது டேனியல் பாலாஜி கேப்டன் மில்லர் படத்திலிருந்து விலகி இருப்பது தனுஷ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.! ஆனால் இவரின் விலகல் குறித்து படக்குழுவினரோ டேனியல் பாலாஜி தரப்போ எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை டேனியல் பாலாஜியே விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்