Categories: சினிமா

உள்ளூர் சேனலில் பரப்பப்படும் தர்பார்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படம் சில உள்ளூர் கேபிள் சேனல்களில் ஒளிபரப்பப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சர்க்கார் படத்தை எடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸால் இயக்கப்பட்ட படம் தர்பார். சமீபத்தில் வெளியான இப்படம் ரஜினியின் 167வது படமாகும்.

உள்ளூர் சேனலில் பரப்பப்படும் தர்பார் 1
தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில் தர்பார் படம் தமிழகத்தில் இயங்கும் சில உள்ளூர் கேபிள் சேனலில் ஒளிபரப்ப போடுவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில், இது அக்கிரமம். பைரஸி உச்சத்தில் உள்ளது. பெரும் செலவு செய்து எடுக்கப்பட்ட தர்பார் படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பப் படுகிறது. தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தர்பார் படம் இணையதளத்தில் வெளியிடுவதற்கு அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்