நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா படம் எப்படி இருக்கு..? பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ.!

வெளியிட்டது

நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தசரா. இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மக்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனங்களையே கூறி வருகின்றனர். சிலர் இந்த படம் கே ஜி எஃப் மற்றும் புஷ்பா படங்களை காப்பி அடித்து எடுக்கப்பட்டது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள். இருந்த போதிலும் இந்த படம் நன்றாகவே இருப்பதாக பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகராக இருக்கிறார் நடிகர் நானி. இவர் தமிழில் வெப்பம் என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் நான் ஈ என்கிற படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்னர் நீதானே என் பொன்வசந்தம், நிமிர்ந்து நில் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பின்னர் தமிழில் பெரிய அளவில் எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது தசரா படத்தில் நடித்து முடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா படம் எப்படி இருக்கு..? பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ.! 1
இந்த படத்திற்குப் பின்னர் அவரின் 30 ஆவது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். புஷ்பா படத்தை இயக்கிய இயக்குனர் சுகுமாரின் உதவி இயக்குனராக இருப்பவர் ஸ்ரீகாந்த் ஒடேலா. இவரின் இயக்கத்தில் தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நானியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சமுத்திரக்கனி, ஷான் டாம் சாக்கோ போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். எஸ் எல் வி சினிமாஸ் அபிஷியல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இரண்டு வாரங்களில் சுமார் 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருந்தது. தெலுங்கானா அருகில் இருக்கும் ஒரு நிலக்கரி சுரங்கத்தை சுற்றி நடக்கும் கதையாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


தற்போது படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மக்கள் பலரும் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பு மிக அருமையாக இருந்ததாகவும், கீர்த்தி சுரேஷ் தான் ஒரு நல்ல நடிகை என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த படம் பார்க்க அப்படியே புஷ்பா போல இருந்ததாகவும், சிலர் நிலக்கரி சுரங்கத்தை மையமாக வைத்து எடுத்ததால் கே ஜி எஃப் படத்தை காப்பி எடுத்து எடுக்கப்பட்டது போல இருந்ததாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அவர்கள் கூறிய அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Friday Review

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்