Categories: சினிமா

நானி, கீர்த்தி சுரேஷின் வெறித்தனமான நடிப்பில் தசரா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது..!

வெளியிட்டது

நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் தசரா திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவில் நானி முற்றிலும் வித்தியாசமாக கிராமத்து தோற்றத்தில் நடித்திருப்பதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. தெலுங்கு உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் வெப்பம் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது நான் ஈ தான். அதன் பின்னர் இவர் நீதானே என் பொன்வசந்தம் படத்திலும், நிமிர்ந்து நில் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் இவர் பெரிய அளவில் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் தசரா என்கிற படத்திலும் அடுத்தபடியாக அவரது முப்பதாவது படத்திலும் நடித்து வருகிறார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நானி, கீர்த்தி சுரேஷின் வெறித்தனமான நடிப்பில் தசரா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது..! 1
தற்போது புஷ்பா படத்தை இயக்கிய இயக்குனர் சுகுமாரின் உதவி இயக்குனராக இருக்கும் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்கத்தில் தசரா என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நாணியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சமுத்திரக்கனி, தீக்ஷித் செட்டி, ஷான் டாம் சாக்கோ உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். எஸ்எல்வி சினிமாஸ் அபிஷியல் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. வருகிற மார்ச் 30ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.ட்ரெய்லரை பார்க்கும் பொழுது தெலுங்கானா அருகில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தை சுற்றி நடக்கும் கதையாக இந்த படம் இருக்கும் என்று தெரிகிறது.


1970 மற்றும் 80களில் தெலுங்கானா பகுதியில் நடந்த கிராமங்களில் நடந்த ஒரு கதையை மையமாக வைத்து இந்த படம் இருக்கும் என்று தெரிகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் பள்ளி ஆசிரியராக நடித்திருக்கிறார். பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளுடன் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணா இசையமைத்திருக்கிறார். ட்ரெய்லரை பார்க்கும் பொழுதே பிஜிஎம் மற்றும் பின்னணி இசைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இந்த படம் இருக்கும் என்று தெரிகிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்