“எப்படி இருக்கிறது அருள்நிதி-எருமை சாணி விஜயகுமாரின் “D block”!! ட்விட்டர் ரிவியூ!!

வெளியிட்டது

"எப்படி இருக்கிறது அருள்நிதி-எருமை சாணி விஜயகுமாரின் "D block"!! ட்விட்டர் ரிவியூ!! 1

இப்போதுள்ள தமிழ் திரையுலகில் பேய் படங்கள் என்றால் எப்படி ராகவ லாரன்ஸ்ஸோ, அதே போல தான் த்ரில்லர் படங்கள் என்றாலே அருள்நிதி தான். “டிமாண்டி காலனி” படம் மூலம் முதல் த்ரில்லர் படம் நடித்த அருள்நிதி அடுத்தடுத்து ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 என வரிசையாக திரில்லர் படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். நடுநடுவில் பிரிந்தாவனம், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் தோன்றி ஹிட் அடித்தாலும் அவருக்கென தனி ஹிட் பட்டியல் உருவாக்கியவை இந்த திரில்லர் படங்கள்.

யூடியூபில் “எருமை சாணி” என்ற சேனல் வைத்து சினிமா கனவோடு அதில் காமெடி குறும்படங்கள் இயக்கி மக்களிடம் மிக பெரிய அறிமுகத்தை பெற்று வைத்துள்ளவர் நடிகர் விஜயகுமார். யூடியூபில் காமெடி கதைக்களத்தில் படங்கள் கொடுத்துவந்தாலும், திரையில் படம் இயக்க முடிவு செய்து அவர் கையில் எடுத்துக்கொண்ட களம் திரில்லர் படங்கள். எப்போதுமே தமிழக மக்கள் மினிமம் கரென்டியாக இந்த படங்கள் வரவேற்பதால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.

அருள்நிதி, அவந்திகா மிஸ்ரா, கரு பழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா என பலர் நடித்துள்ள இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்துள்ள ரசிகர்கள் படம் முதல் பாதியை விட இரண்டு பாதி சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பாக அனைவரும் படத்தின் இன்டெர்வல் பாகத்தை கொண்டாடி வருகிறார்கள்.

பிரபல யூடியூப் விமர்சகர் பிரஷாந்தும் அப்படத்தின் முதல் பாதி பார்த்துவிட்டு, “நன்றாகவே இருக்கிறது இன்டெர்வல்”, செகண்ட் ஹாப்பிறகு நன்றாக அடித்தளம் அடித்தளம் அமைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

மற்றொருரசிகர் காலேஜ் காமெடி காட்சிகள், திரில்லர் காட்சிகள் என இரண்டுமே நன்றாகவே இருக்கிறது. விஜயும் ஆதித்யாவும் செய்யும் காமெடியகள் நன்றாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். படத்தை இயக்கிய விஜயகுமார் மற்றும் அருள்நிதிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறிவருகிறார்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்