நயன்தாரா தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். அந்த செய்தியை அவர் instagram பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டன், என் மகன்களை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நானும் ரவுடிதான் என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிக் கொண்டிருந்தபோது, அதில் நயன்தாரா ஹீரோயினாக நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வரும் இவர்கள், ஏழு வருடங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் சென்னை மகாபலிபுரத்தில் ஒரு ரிசாட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு நயன்தாராவின் தாயார் வராததால், திருமணம் முடிந்த கையோடு தம்பதிகள் கேரளாவிற்கு சென்றனர். பின்னர் தாய்லாந்து ஸ்பெயின் என தேனிலவுக்கு சென்று விட்டு திரும்பி அவர்கள் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தினர். சில நாட்கள் ஆகவே நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள முடிவில் இருப்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. வழக்கம் போல இதுவும் ஒரு புரளியாக இருக்கும் என்று பலரும் கடந்து போக, இன்று மாலை திடீரென இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து நானும் நயன்தாராவும் அம்மா அப்பா ஆகிவிட்டோம் என்று கூறியிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்திருந்தது. ஏனென்றால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண முடிந்து நான்கு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் குழந்தைகள் எப்படி வந்தது என்று குழப்பத்தில் இருந்தனர்.
பலரும் இது வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தை என்று கூறிவந்த நிலையில், விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி திடீரென என் குழந்தைகளை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றைப் போட்டார். அந்த பதிவு ரசிகர்களுக்கு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தியது. டிடி-யும் நயன்தாராவும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை காப்பி வித் டிடி நிகழ்ச்சிக்கு நயன்தாரா வந்தபோது, அவருடைய சோகங்களை சொல்லி அழுதார். அப்போது டிடி கூறிய வார்த்தைகள் நயன்தாராவிற்கு மிகுந்த ஆறுதலை ஏற்படுத்தியது. அன்று தொடங்கி இன்று வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். நயன்தாராவின் திருமணத்திற்கு கூட நடக்க முடியாமல் நடந்து வந்திருந்தார் டிடி. ஏற்கனவே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கிறார் என்ற தகவல் பரவி வரும் நிலையில் டிடியின் இந்த பதிவு பல ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.