பொங்கலை முன்னிட்டு டிடி தற்போது பட்டுபுடவையுடன் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் டிடி என்கிற தேவதர்ஷினி. இன்றைய நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு எல்லாம் முண்ணுதரணமாக விளங்கியவர். தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமே கோலோச்சிய காலத்தில் ரியாலிட்டி ஷோக்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். காஃபி வித் டி.டி என்ற ரியாலிட்டி ஷோக்களில் சினிமா பிரபலங்களை அழைத்து வந்து பேட்டி எடுப்பதும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ரசிகர்கள் மனத்தில் இருக்கும் கேள்விகளைக் கேட்டு பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவார் டிடி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சின்னத்திரைகளில் தலை காட்டுவதை விட்டு விட்டு பெரிய திரையில் தலை காட்டத் தொடங்கியுள்ளார். பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் டி.டி. இது மட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கு பிண்ணனி டப்பிங் பேசி வருகிறார் டி.டி. சமீபத்தில் கூட நயன்தாரா திருமணத்தில் பல முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்த நிலையில் டி.டியையும் அழைத்திருந்தார் நயன்தாரா. அந்த அளவிற்கு பல முண்ணனி நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் நட்பு பாராட்டி வருகிறார். கடைசியாக காபி வித் காதல் திரைப்படத்தில் ஜீவா மற்றும் ஜெய் ஆகியோருக்கு அக்காவாக நடித்து அசத்தியிருந்தார் டிடி.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று உலகம் எங்கிலும் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருவதால் டிடியும் மேக்அப் ஸ்டூடியோ ஒன்றுக்கு சென்று ஹேர் ஸ்டைலை மாற்றி பட்டுபுடவையுடன் முழு தமிழ் பெண்ணாக மாறியிருக்கிறார். அந்த போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below Video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O