நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கைத் தொடங்கியவர் டிடி என்கிற தேவதர்ஷினி. இன்றைய நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு எல்லாம் முண்ணுதரணமாக விளங்கியவர். தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமே கோலோச்சிய காலத்தில் ரியாலிட்டி ஷோக்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். காஃபி வித் டிடி என்ற ரியாலிட்டி ஷோக்களில் சினிமா பிரபலங்களை அழைத்து வந்து பேட்டி எடுப்பதும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ரசிகர்கள் மனத்தில் இருக்கும் கேள்விகளைக் கேட்டு பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவார் டிடி.

டிடி க்கு ஒரு அக்காவும் இருக்கிறார். அவர் பெயர் பிரியதர்ஷினி. இவரும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது மட்டுமில்லாமல் பல தொடர்களில் துணை வேடங்கள், குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். 1984ம் ஆண்டு வெளிவந்த தாவணிக்கனவுகள் என்ற படத்தில் பாக்கியராஜுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். தனது அக்கா தான் தனக்கு குரு என்றும், நிகழ்ச்சி தொகுப்பு பற்றி அவரிடமிருந்தே தான் கற்றுக் கொண்டேன் எனவும் டிடி பல இடங்களில் கூறி உணர்ச்சிவசப்பட்டு இருந்தார். Twitter Original Source from: Priyadharshini
இந்த நிலையில் டிடி தனது அக்காவின் வீடியோ ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். அதில் கடலில் ஒரு பாறையின் மீது நின்று நடனம் ஆடிக் கொண்டிருந்தார் பிரியதர்ஷினி. அப்போது கடல் அலை வேகமாக வீச அதில் வழுக்கி விழுகிறார். மீண்டும் எழுந்து பாறையில் நின்று ஆடிக் கொண்டிருந்த போது மீண்டும் வழுக்கி வருகிறார். அந்த வீடியோவை ஷூட்டிங் பரிதாங்கள் என அவர் பகிர்ந்து இருந்தார். காமெடியாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video
Embed Credits: Galatta