தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வரும் சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் அருள்நிதி. இவரின் படங்களுக்கு என தனி ரசிகர்கள் படையே உள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகன் என்ற இடத்தை அருள்நிதி பிடித்து உள்ளார். 2010ஆம் ஆண்டு வம்சம் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேஜாவு, டைரி, திருவின் குரல் என தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ஹிட் படத்தை கொடுத்து உள்ளார். இவர் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்த படம் என்றால் அது 2015ஆம் ஆண்டு வெளியாகிய டிமான்டி காலனி திரைப்படம் தான். இப்படத்திற்கு பிறகு அருள்நிதி தமிழ் சினிமாவில் உச்ச இடத்திற்கு சென்று விட்டார்.
தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி 2 படத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.
Embed Video Credits : THINK MUSIC INDIA