பிக்பாஸ்ஸில் கலந்து கொண்ட தனலட்சுமி தற்போது உயர் ரக கார் ஒன்றை வாங்கி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் டிக் டாக் செயலி மூலமாக மிக பிரபலமானார். எதாவது புது படம் வந்தால் அந்த படத்தில் வரும் காதாபாத்திரம் போலவே வேடம் அணிந்து அதை டிக்டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனால் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இந்த நிலையில் அவரின் இந்த பிரபலத்தைக் கொண்டு அவருக்கு பிக்பாஸ்ஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 6-ன் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார் தனலட்சுமி.! வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளே சண்டை சர்ச்சரவு என அதிரடியாக விளையாடி வந்தார் தனலட்சுமி. தனலட்சுமி மீது அசீம் தவறான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் தன் மீது தவறில்லை என்று தனலட்சுமி குறும்படம் மூலமாக நிரூபித்தார். இதனால் தனலட்சுமி மீது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மதிப்பு கூடியது. ஆனால் அதை தொடர்ந்து தனக்கு சாதகமாக்கி கொண்டு சண்டையிட்டு வந்தார். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான பொதுமக்கள் அவருக்கு குறைந்த வாக்குகள் அளித்து வெளியேற்றினர். தனலட்சுமியின் இந்த வெளியேற்றம் குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். சரியோ தவறோ தனலட்சுமி ஒரு ஸ்ட்ரோங் போட்டியாளர், அவரை வெளியேற்றியது கொஞ்சமும் நியாமில்லை என்று பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர்.
பிக்பாஸ்ஸுக்குப் பின்னர் சில நாட்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறாமல் இருந்து வந்த தனலட்சுமி சமீப காலமாக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் சமூகவலைதங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் தனலட்சுமி இன்று ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கியா உயர் ரக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த தனலக்ஷ்மியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O