எதிர்பாராததை எதிர்பாருங்கள்..! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் தனலட்சுமி.!

வெளியிட்டது

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேறி இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்திருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 74 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். தற்போது பத்து போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வார எலிமினேஷனில் தனலட்சுமி வெளியேற இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஜனனி வெளியேறிய போது மக்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தார்களோ அதே போல தற்போது தனலட்சுமி வெளியேற்றத்திற்கும் மக்கள் இணையதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேர்மையற்ற முறையில் இந்த எலிமினேஷன் நடைபெற்று இருப்பதாக அவர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்..! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் தனலட்சுமி.! 1

தனலட்சுமி பொதுமக்களில் இருந்து வந்தவர் என்பதாலும், மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும்போது மக்களிடம் செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்ற காரணத்தினாலும் தனலட்சுமி வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மேலும் மைனா ரட்சிதா போன்றவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வெளியில் இருப்பதால் இருப்பதாலும், அவர்கள் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் என்பதாலும் அவர்களை தக்க வைக்க தான் பிக்பாஸ் திட்டமிடுகிறது என்று பிக்பாஸ் மீது இணைய நெட்டிசன்களும், பிக்பாஸ் ரசிகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். தனலட்சுமி வெளியேறும் பட்சத்தில் Freez டாஸ்க்கில் தனது தாயை இந்த பிக்பாஸிற்குள் அழைத்து வந்து பெருமைப்படுத்த வேண்டும் என்ற தனலட்சுமியின் ஆசை நிறைவேறாமலேயே வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனலட்சுமி தற்போது வெளியேறி இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. ஆரம்பம் முதலே ஸ்டராங் பிளேயராக இருந்து வந்த தனலட்சுமி பொம்மை டாஸ்க், பேக்டரி டாஸ்க், ஏலியன் டாஸ்க் என அனைத்திலும் சிறப்பாக ஆடி வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்