Categories: சினிமா

இறுதிக்கட்டத்திற்கு வந்த விவாகரத்து வழக்கு..! ஆஜர் ஆகாத தனுஷ் ஐஸ்வர்யா..!

வெளியிட்டது

தமிழ் தொடங்கி தற்போது தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வரை உயர்ந்திருப்பவர் தனுஷ். இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தமிழில் சிறிய நாயகனாக அறிமுகமாகி பல விமர்சனங்களை தாங்கி தன்னை தானே செதுக்கி இன்று உலக சினிமா வரை உயர்ந்து இருப்பவர் தனுஷ். பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டத்திற்கு வந்த விவாகரத்து வழக்கு..! ஆஜர் ஆகாத தனுஷ் ஐஸ்வர்யா..! 1

பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கி இயக்குனராக உருவெடுத்த தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தையும் இவரே இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ள நிலையில், தற்போது தனுஷ் இளைஞர்களை வைத்து இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் என்ற படத்தினை அடுத்து வெளியிட தயாராகி இருக்கிறார்.

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்து இருந்தார். இதற்காக விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகாததால், இன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இன்றும் இந்த வழக்கில் இவர்கள் ஆஜராகாத நிலையில், மனுவை அடுத்த 2ஆம் தேதி தள்ளிவைத்து உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்