தற்போது திரைத்துறையின் உச்சம் தொட்டுள்ளார் நடிகர் தனுஷ் என்றே சொல்லலாம். நடிப்பு, தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர், டைரக்டர் என சினிமாவின் அணைத்து துறைகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்து, தமிழை தாண்டி ஹிந்தி, ஆங்கில மொழி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கேனே மிக பெரிய ரசிகர் பட்டாளம் இந்திய முழுவதிலும் உள்ளது.

இன்று தன்னுடைய பிறந்தநாளை நடிகர் தனுஷ் கொண்டாடி வருகிறார். பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் நிறைய இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அவரின் அடுத்த படமான “வாத்தி” படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்பொது இவர் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் “திருச்சிற்றம்பலம்” செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்”, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூறி இயக்கத்தில் “வாத்தி” போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற படமும் அறிவிவிக்கப்பட்டுள்ளது. படு பிஸியாக நடித்து வரும் தனுஷ் தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் எழுதியும், சில பாடல்கள் பாடியும் வருகிறார். அந்த வகையில் இப்பொது நடிகர் தனுஷ், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா என பலர் நடித்துள்ள “திருச்சிற்றம்பலம்” படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தனுஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் தனுஷ், தந்தை கஸ்தூரி ராஜா, தாய், செல்வராகவன், சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் என கூட்டு குடும்பமாக எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. என்ன விஷயம் என்று விசாரித்ததில் நடிகர் தனுஷின் தாய் மற்றும் தந்தை திரு.கஸ்துரி ராஜா பீமரத சாந்தி வைபவம் நடந்தேறியுள்ளது.