விடுதலைப் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அந்த படத்தில் இருந்து இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாக இருக்கிறது. அதில் இளையராஜா தனுசுக்கு பாடல் சொல்லிக் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆர்எஸ் இன்ஃபோடைன்மென்ட் எல்ரட் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஒரே பாகமாக எடுக்கப்பட இருந்த இந்த படம் தற்போது நீளம் காரணமாக இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. முதல் பாகம் விரைவில் திரையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்தப் படம் ஒரே பாகமாக தான் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் படத்தில் ஏற்பட்ட சில மாறுதல் காரணமாக படம் நீளம் ஆகிவிட்டது. இதனால் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இந்த நிலையில் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான உன்னோடு நடந்த என்கிற பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாடலாசிரியர் சுகா எழுதியுள்ள இந்த பாடலை தனுசும் அனன்யா பட்டும் இணைந்து பாடி இருக்கின்றனர். இளையராஜா உடன் இணைந்து முதல் முறையாக தனுஷ் பாடி இருக்கும் பாடல் இதுவாகும். இந்த பாடலின் முதல் ப்ரோமோ நேற்று வெளியாகியிருந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் உன் துணைக்கு நான் தான், என் துணைக்கு நீ தான் என்ற வரிகளை இளையராஜா தனுஷுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து தனுஷும் அந்தப் பாடலை பாடி காட்ட உன் துணைக்கு நான்தான் என்று இளையராஜா தனுசை பார்த்து கூறுகிறார் .அந்த வார்த்தையில் அர்த்தங்கள் நிறைய பொதிந்து இருப்பதால், தனுஷ் கையெடுத்து கும்பிட்டு எப்போதும், என்றென்றும் நீங்கள்தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: RS Infotainment