Categories: சினிமா

பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவேன்!!நடிகர் தனுஷ் தொடுத்துள்ள வழக்கு!!!

வெளியிட்டது

மாஸ் ஆக்ஷன் ஹீரோவாகவும், நடிப்பில் அரக்கனாகவும் இருக்கும் நடிகர் தனுஷ். “துள்ளுவதோ இளமை” படத்தில் அறிமுகமான இவர், அவரை கலாய்த்தவர்கள் மத்தியில் இன்று 3 தேசிய விருதுகள், பல பிலிம் ஃபேர் விருதுகள் என் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாலாசிரியர், பாடகர் என பல பரிமாணங்களில் வெற்றிக் கொடிகட்டி பறந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விவாகரத்து ஆகியுள்ள நடிகர் தனுஷிற்கு மேலும் ஒரு மிக பெரிய தலைவலி ஒன்று இருக்கிறது. சில ஆண்டுகள் முன்பு, மேலூரை சேர்ந்த தம்பதிகள் கதிரேசன் – மீனாட்சி என்பவர்கள் சிறு வயதில் ஓடிப்போன எங்களுடைய மகன் தான் பெயர் மாற்றிக்கொண்டு இப்பொது திரையுலகில் தனுஷாக இருக்கிறார், எங்களுக்கு மாத மாதம் அவரிடம் இருந்து ஜீவனாம்சம் வேண்டும் என கோர்ட்டில் பரபரப்பு வழக்கு ஒன்றை தொடுத்தனர்.

பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவேன்!!நடிகர் தனுஷ் தொடுத்துள்ள வழக்கு!!! 1

எதற்கும் தயாராக இருக்கும் அவர்கள், மரபணு பரிசோதனைக்கு கூட ஒப்புக்கொண்டு கோர்ட்டில் எங்களுக்கு நியாயம் வேண்டும் என கோரிக்கை வைத்து வருகினறனர். சில முறை நடிகர் தனுஷும் கோர்ட்டில் ஆஜராகி இது குறித்து விளக்கமும் அளித்துள்ளார். தான் தன்னுடைய அம்மா அப்பாவான கஸ்தூரி ராஜாவுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அது பொய்யான வழக்கு என தனது பக்க வாதத்தை முன் வைத்தார்.

பொறுத்து பொறுத்து பார்த்த நடிகர் தனுஷ் அவர்கள் விடாப்பிடியாக இருப்பதால், தற்போது நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் வழக்கு தொடருவேன் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு” என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த வழக்கு எங்கு சென்று முடியும் என்பது நீதிமன்றத்திற்கு இன்னமும் சரியாக தெரியவில்லை.

Video Courtesy – Polimer news

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்