நடிகர் தனுஷ் தற்போது சென்னை போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றைக் கட்டி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் பலராலும் உருவக் கேலி செய்யப்பட்டார். ஆனாலும் தன்னுடைய அயராத உழைப்பாலும், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாலும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் வரை சென்று இருக்கிறார் தனுஷ். தற்போது பல நல்ல படங்களை நடித்து 100 கோடி வசூல் செய்யும் கிளப்பில் இணைந்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து புதிய சாதனை படைத்திருந்தது. அடுத்ததாக இவர் நடித்த நானே வருவேன் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. தற்போது கைவசம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
இதில் வாத்தி திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படம் சுமார் 20 கோடி வசூலை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். தனது மனைவியை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழ்ந்து வரும் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டி வருவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடிந்த பின்பு ஐஸ்வர்யா ரஜினி உடன் சேர்ந்து வாழ இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனுஷ் புதிதாக போயஸ் கார்டனில் வீடு ஒன்றைக் கட்டி அதை தனது தாய் மற்றும் தந்தைக்கு பரிசாக அளித்துள்ளார் என்று அவர் பகிர்ந்து இருக்கிறார்.
தம்பி தனுஷின் புதிய வீடு, கோவில் உணர்வு எனக்கு. வாழும் போதே தாய், தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக
உணரப் படுகிறார்கள். மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துக்காட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள். இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும், உன்னை பார்த்து ஏங்கட்டும், உன்னை கண்டு வியக்கட்டும், வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க. என தனுஷை வாழ்த்தி அவர் பதிவிட்டும் இருக்கிறார். தனுஷின் புதிய வீடு மிகப் பிரம்மாண்டமாக இருப்பதாக தனுஷின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O