Categories: சினிமா

புதிய வேடத்தில் நடிக்கிறார் தனுஷ்!!

வெளியிட்டது
புதிய வேடத்தில் நடிக்கிறார் தனுஷ்!! 1

துரை செந்தில்குமார் இயக்கி வந்த பட்டாஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போதே முடிந்த நிலையில், இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தனுஷ் தந்தை மகனாக இரு வேடங்களில் நடித்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தின் பெயர் பட்டாஸ் என்றும் அதையே படத்துக்கு தலைப்பாக தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்தில் நடித்த பிறகு நீண்ட நாள் கழித்து சினேகாவும் இந்த படத்தில் நடித்துள்ளார். மெஹ்ரீன் கதாநாயகியாக நடித்துள்ளார். நவீன் சந்திராவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

மன்னர் காலத்தில் சோழர் மன்னன் பயன்படுத்திய தற்காப்பு கலையை மையமாக கொண்டு தயாரித்து உள்ளனர். அதிரடி காதல் படமாக தயாராகி உள்ளது. இந்த படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். தாதாக்களை மையப்படுத்தி அதிரடி படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்திற்காக தனுஷ் தன்னை மாற்றி உள்ளார். தனுஷ் நடிக்கும் தோற்றம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதில் நீளமான மீசை வைத்து நடிக்கிறார்.பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நீளமான மீசை வைத்து இருந்ததுபோல் தனுஷ் மீசை உள்ளது. இந்த தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்