தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளக்கும் ரசிகர்கள்

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் இறுதியாக நடித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓ.டி.டி யில் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தார்.

தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளக்கும் ரசிகர்கள் 1

ஈழ தமிழர்களை பற்றி மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் தற்போது அடுத்த படங்களான நானே வருவேன், D 43 ஆகியபடங்களில் கவனம் செலுத்தவுள்ளார். மேலும் ஹோலிவுட்டில் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதே போன்று தெலுங்குயிலும் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தனுஷின் சொத்துமதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இது அதிகாரபூர்வமாக கூறப்படவில்லை என்றாலும் கோலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடியை தாண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாது 150 கோடி செலவில் புதிய வீட்டை கட்டி வருகிறார் தனுஷ் என்ற தகவலும் கசிந்துள்ளது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்