மீண்டும் ரவுடி பேபி தனுஷோடு கூட்டணி சேரும் மலர் டீச்சர்? உற்சாகத்தில் ரசிகர்கள்

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். அதன் பிறகு திரையுலகில் பெரும் வெற்றி கண்ட ஹீரோவாக உருவெடுத்தார் தனுஷ். இவர் இறுதியாக நடித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் ரவுடி பேபி தனுஷோடு கூட்டணி சேரும் மலர் டீச்சர்? உற்சாகத்தில் ரசிகர்கள் 1

இதை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் திரைப்படங்களில் நடித்து வந்த தனுஷ் தற்போது தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இயக்குனர் சேகர் கமுலா இயக்கவுள்ள இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

சாய் பல்லவி தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்கிற நடிகை. ஏற்கனவே தனுஷோடு மாரி 2 இல் படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி , தற்போது இந்த படத்தில் மீண்டும் இணையவுள்ளார். இந்த ரவுடி பேபி கூட்டணி மீண்டும் அமையப்போகிறது என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்