வாத்தி படத்தின் பாடலை ஸ்வேதா மோகனுடன் இணைந்து மேடையில் நடிகர் தனுஷ் பாடியிருந்தார் அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. தனுஷும் ஸ்வேதா மோகனும் பாடிக்கொண்டிருந்த போது தனுஷின் மகன்கள் லிங்கா மட்டும் யாத்ரா இருவரும் மேடைக்கு கீழே அமர்ந்து கொண்டு அவர்கள் பாடியதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது வாத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ஸ்வேதா மோகன் பாடிய “வா வாத்தி” என்கிற பாடல் மிகப் பிரபலமாக இருக்கிறது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்யாதவர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தனர். ட்ரைலர் வீடியோவை பார்க்கும் பொழுது இந்த படம் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கும், கல்வியை வியாபாரமாக செய்யும் பண முதலாளிகளுக்கும் இடையே நடக்கும் கதையாக இருக்கும் என்று தெரிகிறது. கல்வியை பிரசாதம் போல கொடுங்கள் அதை விற்காதீர்கள் என்று அதிரடியாக வசனம் பேசுகிறார் தனுஷ். எனவே இந்த படம் சமூக அக்கறையுடன் கூடிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாக இன்னும் மூன்றே தினங்கள் இருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.
இந்த விழாவில் நடிகர் தனுஷ் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஸ்வேதா மோகனை அழைத்து “வா வாத்தி” என்கிற பாடலை பாடச் சொன்னார் தொகுப்பாளினி டிடி. அப்போது அவருடன் சேர்ந்து தனுஷும் அந்த பாடலை செம்ம க்யூட்டாக பாடினார். அவர்கள் இருவரும் பாடிக் கொண்டிருந்ததை கீழே அமர்ந்து தனுஷின் மகன்கள் லிங்கா மற்றும் யாத்திரா இருவரும் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!
Youtube Video Embed Code Credits: Sun Tv